×

குன்னூர் அரசு லாலி மருத்துவமனை பிரசவ வார்டில் அடிப்படை வசதி இல்லை

குன்னூர், நவ. 5:குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில்  அடிப்படை வசதிகள் இல்லாததால் பொது மக்கள்  அவதிப்படுகின்றனர். குன்னூர் பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட  நூற்றாண்டு பழமையான  அரசு லாலி மருத்துவமனை  உள்ளது.  குன்னூர் மக்கள்  மட்டுமின்றி  பல்வேறு  கிராமங்களில்  இருந்தும் ஏழை  எளிய  மக்கள் தங்களது மருத்துவ தேவை மற்றும் பிரசவம் உள்ளிட்டவைக்கு  இந்த மருத்துவமனையை நாடி  வருகின்றனர். இந்நிலையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடம் என்பதால் அவற்றின் ஒரு சில கட்டிடங்கள் புனரமைக்கப்பட்டது.

தற்போது, பிரசவத்திற்கு  வரக்கூடிய  பொது மக்கள்  அமர இருக்கைகள் இல்லாததாலும், நோயாளிகளை கவனித்து கொள்பவர்களுக்கு உறங்க இடமின்றி  தரையில்  அமர்ந்தும், குழந்தைகளுடன் தரையில்  உறங்கியும் வருகின்றனர். இதனால்  கர்ப்பிணி பெண்கள் கடும் அவதிப்படுகின்றனர்.  மேலும் குறைந்தளவில் மகளிர் மருத்துவர்கள் உள்ளதால் அவர்கள்  விடுமுறை நாட்களில்  சென்று விட்டால் பிரசவத்திற்கு  வரக்கூடிய கர்ப்பிணிகளை  ஊட்டி அரசு மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரைக்கின்றனர். இதனால்  பிரசவத்திற்கு  வரக்கூடிய  கர்பிணி பெண்கள் மற்றும்  அவர்களது உறவினர்கள்  கடும் அவதிக்குள்ளாகின்றனர்.  எனவே குன்னூர் லாலி மருத்துவமனைக்கு தேவையான  அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்  மேலும்  பிரசவம் பார்க்க கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் என்பது கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags : Kunnur Government Lali Hospital Maternity Ward ,
× RELATED சுற்றுலா பயணிகள் வருகை குறைய வாய்ப்பு