×

‘சிஸ்பா’ வெள்ளிவிழா கட்டிடம் திறப்பு

கோவை, நவ. 5:  கோவையில் தென்னிந்திய சிறு நுாற்பாலைகள் சங்க (சிஸ்பா) வெள்ளி விழா கட்டடம் திறப்பு விழா பீளமேடு கோல்டுவின்ஸ் பகுதியில் உள்ள ஆசிரியர் காலனியில் நேற்று முன்தினம் நடந்தது. சுமார் 6 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த கட்டிடத்தில் 150 பேர் அமரக்கூடிய வகையில் கருத்தரங்கு கூடம், பருத்தி நுாலிழையை பரிசோதனை செய்யும் ஒரு ஆய்வரங்கம் ஆகியவையும் இடம்பெற்றுள்ளது. இப்புதிய கட்டிடத்தை, லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் நிறுவன தலைவர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு திறந்துவைத்து, விழா மலர் வெளியிட்டார்.  
தொடர்ந்து, தென்னிந்திய சிறு நூற்பாலைகள் சங்க (சிஸ்பா) 25வது ஆண்டு வெள்ளி விழா நடந்தது. சிஸ்பா தலைவர் முருகேசன் வரவேற்றார். லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் நிறுவன தலைவர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். விழாவில், தென்னிந்திய மில்கள் சங்க தலைவர் அஸ்வின் சந்திரன், இந்திய ஜவுளித்தொழில் கூட்டமைப்பின் தலைவர் ராஜ்குமார், தமிழ்நாடு ஸ்பின்னர்ஸ் சங்க தலைவர் அப்புக்குட்டி உள்பட பலர் பங்கேற்றனர். முடிவில், சிஸ்பா செயலாளர் வெங்கடேஷ் பிரபு நன்றி கூறினார்.

Tags : Cispa' Silver Festival Building ,
× RELATED கோவை மேட்டுப்பாளையம் ரோடு...