×

டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான மருத்துவமனை, பள்ளிக்கு 3.5 லட்சம் அபராதம்

பூந்தமல்லி: டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகள், பள்ளிகள், வீடுகளில் அடிக்கடி சென்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு டெங்கு கொசுப்புழுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில்,  சுகாதார இணை இயக்குனர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் திருவேற்காடு நகராட்சி ஆணையர் சித்ரா தலைமையில் மாவட்ட பூச்சியியல் வல்லுநர் டாக்டர் வேல்முருகன், வட்டார மருத்துவ அலுவலர் லாவண்யா, சுகாதார அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் சாமுவேல் ஆகியோர் கொண்ட குழுவினர் திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மருத்துவமனை கேண்டீன், கிடங்கு மற்றும் மருத்துவமனை வளாகம் முழுவதும்  டெங்கு கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த மருத்துவமனை நிர்வாகத்திற்கு ₹2.50 லட்சம் அபராதம் விதித்தனர். இதேபோல தனியார் பள்ளியில் டெங்கு கொசு புழுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பள்ளிக்கு ₹1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

போலிபெண் மருத்துவர் கைது:திருத்தணி அடுத்த மேல் திருத்தணி அமிர்தாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி (43). இவர் பிளஸ்டூ வரை படித்து, லேப் டெக்னீசியன் முடித்து, தனது வீட்டில் பொது மருத்துவம் (ஆங்கில மருத்துவம்) பார்த்து வந்தார்.
இதையடுத்து மாவட்ட காசநோய் இணை இயக்குனர் லட்சுமி முருகன் தலைமையில் சுகாதார துறையினர் நேற்று மேற்கண்ட பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, வேளாங்கண்ணி பொது மருத்துவ சிகிச்சை அளித்துக் கொண்டிருந்ததை கண்டுபிடித்து ஆங்கில மருந்து, மாத்திரைகள் பறிமுதல் செய்தனர். மேலும், போலி மருத்துவர் வேளாக்கண்ணியை திருத்தணி போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து போலி மருத்துவர் வேளாங்கண்ணியை கைது செய்தனர்.

Tags : Hospital ,
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...