தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு நிதியுதவி

பரமத்திவேலூர், நவ.1: பரமத்திவேலூர் நகர திமுக பிரமுகரும், பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் உள்ள கண்ணன் ஹார்டுவேர் நிறுவன உரிமையாளருமான சி.எம். கண்ணன், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு, திருவாரூர் அருகே காட்டூரில் அமையவுள்ள கலைஞர் கருணாநிதியின் அருங்காட்சியகத்திற்காக, தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு ₹50,000 நிதி உதவி வழங்கினார். அதற்கான காசோலையை திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கினார். காசோலையை பெற்றுக்கொண்ட ஸ்டாலின், கலைஞர் எழுதிய புத்தகத்தை பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

Related Stories: