×

கோவை வடக்கு மாவட்ட காங். சார்பில் இந்திராகாந்தி நினைவுதினம் அனுசரிப்பு

கோவை, நவ. 1:கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் இந்திராகாந்தி நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், முன்னாள் பிரதமர்   இந்திராகாந்தி 35வது நினைவுதினம் சூலூர் அருகேயுள்ள வாகராயம்பாளையத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் வி.எம்.சி. மனோகரன் தலைமை தாங்கி, இந்திராகாந்தி படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், வி.எம்.சி. மனோகரன் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதன்பின்னர், வி.எம்.சி.மனோகரன் பேசுகையில், ‘’இந்திராகாந்தி, பெண் சமூகத்திற்கு மிகப்பெரிய பெருமை சேர்த்தவர். உலகநாடுகள் இந்தியாவையும், இந்திராவையும் பார்த்து ஆச்சிரியம் கொண்டன. கிராமப்புறங்களிலும் பொருளாதாரம் மிக சிறப்பாக வளர காரணமாக இருந்தார். இந்திராவின் தியாகத்தை போற்றுவோம். அவர் வழி பின்தொடர்வோம்’’ என்றார்.

இதைத்தொடர்ந்து, சவுடேஸ்வரி மஹாலில் அன்னை இந்திராவும், தேசிய ஒருமைப்பாடும்  என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சியில், காங்கிரஸ் நிர்வாகிகள் எச்.எம்.எஸ் மாநில செயலாளர் ராஜாமணி, விஜயகுமார், கணேசமூர்த்தி,  முருகேசன், ரங்கசாமி, பழையூர் செல்வராஜ், சொக்கம்புதூர் கனகராஜ், பேரூர்  மயில், கோவை ஹனீபா, வெள்ளிங்கிரி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் நவீன்குமார், சுரேஷ்குமார், அசோக்குமார், கோபாலசாமி, மாரப்பன், பாலசுப்பிரமணியம், முன்னாள் கவுன்சிலர் பாலு, மும்மூர்த்தி, கோபால், தண்டபாணி, கராத்தே ராமசாமி, உள்பட பலர் பங்கேற்றனர்.



Tags : Coimbatore Northern District Cong ,
× RELATED வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் வேதனை