×

112வது தேவர் ஜெயந்தி முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மரியாதை

சிவகாசி. அக். 31: முத்துராமலிங்க தேவர் 112வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிவகாசியி–்ல் உள்ள தேவர் திருவுருவ சிலைக்கு பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து  மரியாதை செலுத்தினார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 112வது ஜெயந்தி விழா நேற்று தமிழகம் முழுவதிலும் நடைபெற்றது. தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சிவகாசியில் உள்ள முத்துராலிங்கதேவர் சிலைக்கு பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி திருத்தங்கல், ரிசர்வ்லயன், சிவகாசியில் உள்ள தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அன்னதானத்தையும் தொடங்கி வைத்தார். தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க வருகை தந்த அமைச்சருக்கு அதிமுக நிர்வாகிகள், பல்வேறு தேவர் அமைப்புகள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், நகர செயலாளர் பொன்சக்திவேல் வேண்டுராயபுரம் கூட்டுறவு சங்க தலைவா் வேண்டுராயபுரம் காளிமுத்து, மாவட்ட மாணவரணி இணைச்செயலாளர் யுவராஜ், மாவட்ட இளைஞர் பாசறை துணை செயலாளர் சிங்கராஜ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற ஒன்றிய செயலாளர் கருப்பு(எ)லட்சுமிநாராயணன், பொதுக்குழு உறுப்பினர்கள் பாபுராஜ், கருப்பசாமிபாண்டியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் பாண்டியராஜன், திருவில்லிபுத்தூர் இளைஞர் பாசறை செயலாளர் செல்லப்பாண்டியன், மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Rajendrapalaji ,Deva Jayanthi Muthumalinga Thevara ,
× RELATED அதிமுகவை கைப்பற்ற அமித்ஷா முயற்சியா? அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி