×

மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெட், பெட்சீட் இல்லாமல் நோயாளிகள் அவதி

சிவகங்கை, அக். 31: சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெட், பெட்சீட் இல்லாமல் இரும்பு கட்டிலில் படுக்க வைப்பதால் நோயாளிகள் தவித்து வருகின்றனர். சிவகங்கையில் கடந்த 2011ம் ஆண்டில் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பதில் புதிய மருத்துவமனையும், 2012ல் மருத்துவக்கல்லூரியும் இயங்கத் தொடங்கியது. இங்கு தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். உள்நோயாளிகள் பிரிவில் 500 படுக்கைகள் உள்ளன. வெளி நோயாளிகள் பிரிவில் தினமும் 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். கர்ப்பிணி பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தினமும் பல்வேறு பரிசோதணைக்காக வருகின்றனர். விபத்தில் காயம்பட்டு இம்மருத்துவமனைக்கு அதிகமானோர் வருகின்றனர். விபத்து மற்றும் பல்வேறு வகைகளில் காயம்பட்டு வருபவர்கள், காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் படுக்க இரும்பு கட்டில்கள் உள்ளன. கட்டில் மேல் பெட் நிரந்தரமாக இருக்கும். அதன் மேல் இருக்கும் பெட்சீட்கள் அவ்வப்போது மாற்றப்படும்.

இந்நிலையில் வார்டு எண்.205 உள்பட பல்வேறு வார்டுகுளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்கள் படுக்கவைக்கப்பட்டுள்ள பல கட்டில்களில் பெட் இல்லை. இதுபோல் பெட் சீட்டும் இல்லை. தற்போது மழை பெய்து வருவதால் அதிகமாக குளிர் காணப்படுகிறது. நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதலாக குளிர் இருக்கும். அவர்களை பெட் மற்றும் பெட்சீட் இல்லாமல் இரும்பு கட்டிலில் படுக்க வைப்பாதல் அவர்கள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்கள் கூறியதாவது:பெட், பெட் சீட் இன்றி படுப்பதால் அதிகமாக குளிர் வாட்டுகிறது. பெட் சீட்டாவது கொடுங்கள் என மருத்துவமனை பணியாளர்களிடம் கேட்டால் தற்போது இல்லை. வீட்டில் இருந்து கொண்டு வாருங்கள் என்கின்றனர். வீட்டில் இருந்து பார்ப்பதற்கு கூட யாரும் வராமல் ஆதரவற்ற நிலையில் உள்ளவர்களே அதிகமாக சிகிச்சை பெற்று வருகிறோம். எனவே மருத்துவமனையில் ஆய்வு செய்து உரிய பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED மஞ்சுவிரட்டு நடத்திய 6 பேர் மீது வழக்கு