×

நெஞ்சுவலியால் கூலிதொழிலாளி சாவு

விருத்தாசலம், அக். 31: விருத்தாசலம் அடுத்த டி.வி.புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி மகன் தெய்வசிகாமணி(46). விவசாய கூலி தொழிலாளி. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த செந்தில் என்பவருடன் நேற்று முன்தினம் கூலி வேலைக்காக விருத்தாசலம் அருகே உள்ள வயலூருக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை தனது இருசக்கர வாகனத்தில் செந்தில் அழைத்துக்கொண்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து தெய்வசிகாமணியின் உடல், பிரேத பரிசோதனைக்காக பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தெய்வசிகாமணியின் மனைவி சுகுணா கொடுத்த புகாரின்பேரில் விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : death ,
× RELATED மூணாறு நிலச்சரிவில் சிக்கி...