திம்மசமுத்திரம் கிராமத்தில் அங்கன்வாடி கட்டும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

ஸ்ரீமுஷ்ணம், அக். 31: ஸ்ரீமுஷ்ணம் அருகே சோழத்தரம் ஊராட்சிக்கு உட்பட்ட திம்மசமுத்திரம் கிராமத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பொருட்டு டெண்டர்விடப்பட்டு பணிகள் நடைபெற்றது. ஆனால் இந்த பணிகள் முடிவடையாமல் பாதியில் நிறுத்தப்பட்டு இரண்டாண்டாக கட்டிடம் பயன்பாட்டிற்கு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் தனியார் இடத்தில் போதிய வசதியின்றி அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. எனவே அரசு நடவடிக்கை எடுத்து கிடப்பில் போடப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தை விரைந்து முடித்து மாணவர்கள் அங்கு பயில நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: