×

வெடிக்காத பட்டாசை அருகில் சென்று பார்த்தபோது பட்டாசு வெடித்து சிறுவன் முகம் சிதறி பலி

சோளிங்கர், அக். 31: வெடிக்காத பட்டாசை அருகில் சென்று பார்த்தபோது திடீரென வெடித்ததில் முகம் சிதறி சிறுவன் பரிதாபமாக இறந்தான். வேலூர் மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாணாவரம் அருகே எலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி(35), கட்டிட மேஸ்திரி. இவரது மகன் செல்வராஜ்(10). இவர் கடந்த 28ம் தேதி இரவு தீபாவளி பண்டிகைக்காக வாங்கி வந்த பட்டாசுகளை வெடித்து கொண்டிருந்தார். அப்போது, ஒரு பட்டாசுக்கு நெருப்பு வைத்தபோது வெடிக்கவில்லை.

இதனால், பட்டாசு அருகே சென்று நெருப்பு உள்ளதா? என பார்த்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக திடீரென பட்டாசு வெடித்தது. இதில், செல்வராஜ் முகம் சிதறி பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர், அவரை பெற்றோர் நெமிலி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே செல்வராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பாணாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED கட்டையால் தாக்கி மனைவி கொலை போதை கணவன் கைது காட்பாடியில் பயங்கரம்