×

3 வாலிபர்கள் குண்டாசில் கைது வேலூரில் தொடர் திருட்டு

வேலூர், ஜூன் 9: வேலூரில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டார். வேலூர் எஸ்பி மணிவண்ணன் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி, நேற்று 8ம் தேதி வேலூர் வடக்கு காவல் நிலைய எல்லையில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த கணேஷ்(24), சீனிவாசன்(20), சதீஷ்(22) ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க எஸ்பி மணிவண்ணன் கலெக்டர் சுப்புலட்சுமிக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், மேற்கண்ட 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டார். இந்த உத்தரவின் நகலை டிஎஸ்பி திருநாவுக்கரசு, வடக்கு இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பேரிடம் வழங்கினர்.

The post 3 வாலிபர்கள் குண்டாசில் கைது வேலூரில் தொடர் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Kundazi ,Vellore ,Collector ,Subbulakshmi ,SP ,Manivannan ,Dinakaran ,
× RELATED 1,283 பள்ளிகளில் ஆதார் பதிவு முகாம்,...