நாகையில் மிதமான மழை

நாகை,அக்.27: நாகை மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் மழை பெய்ய தொடங்கியது. நாகை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த மழை நேற்று முன்தினம் பெய்யவில்லை. இதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க சென்றனர். அதேபோல் தரைக்கடை வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் நேற்று அதிகாலை முதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. நாகை நகரம், வேளாங்கண்ணி, சிக்கல், கீழ்வேளூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால் தீபாவளி பண்டிகையின் போது திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் காலை நேரங்களில் வெளியில் செல்ல முடியாமல் கஷ்டப்பட்டனர்.

தீபாவளி பண்டிகையின்போது எவ்விதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க நாகை மாவட்டத்தில் எஸ்பி ராஜசேகரன் உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 4 டிஎஸ்பி தலைமையில் 8 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு இன்ஸ்பெக்டருக்கு 10 போலீசார் வீதம் 80 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். மேலும் ஒரு போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு சப் இன்ஸ்பெக்டருக்கு 3 போலீசார் வீதம் 15 போக்குவரத்து பிரிவு போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை தவிர 117 ஊர்க்காவல் படையினரும் என்று மொத்தம் 500க்கும் மேற்பட்ட போலீசார் நாகை மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>