×

கறம்பக்குடியில் கலை நிகழ்ச்சி நடத்தி மது ஒழிப்பு பரப்புரை

கறம்பக்குடி, அக்.27: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் புதுக்கோட்டை மாவட்ட மனித நேய ஜனநாயக கட்சி மேற்கு மாவட்டம் சார்பில் மது ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி பரப்புரை நடைபெற்றது. பேருந்து நிலையம், சீனிக்கடை முக்கம், அம்புக்கோவில் முக்கம் ஆகிய இடங்களில் நடைபெற்ற மது ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி பரப்புரையை மேற்கு மாவட்ட செயலாளர் முகமது ஜான் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இதில் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள், கலை நிகழ்ச்சி குழுவினர் தமிழகத்தில் மதுவை முற்றிலுமாக ஒலிக்க வேண்டும் என்ற நிகழ்வை மையமாக வைத்து பாடல்களை பாடி ஆடி விழிப்புணர்வு பரப்புரையை நிகழ்த்தினர். இந்நிகழ்ச்சியில் அக்கட்சியை சேர்ந்த தீன் முகமது, சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Alcohol campaign ,
× RELATED சீராக வழங்க கோரிக்கை பொன்னமராவதியில் மே தின விழா கொண்டாட்டம்