×

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 529 இடங்களில் தடுப்பூசி முகாம்-ஆட்சியர் துவக்கி வைத்தார்

கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சசி மாவட்டத்தில் நேற்று 529 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஏற்பாடு செய்திருந்தன. அதாவது அனைத்து அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் பகுதியான பேருந்து நிலையம், அங்கன்வாடி மையம், 100 நாள் வேலை திட்டபணிகள் உள்ளிட்ட பகுதியில் முதல் மற்றும் இரண்டாம் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் விதமாக சிறப்பு முகாம் நடந்தது. கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் சிறப்பு முகாமை ஆட்சியர் ஸ்ரீதர் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். உளுந்தூர்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன், கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம், சுகாதார பணிகள் துணை இயக்குநர் பூங்கொடி, கூடுதல் எஸ்பி ஜவஹர்லால் ஆகியோர் உடன் இருந்தனர்.கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய வளாகம், வஉசி நகர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, விளாந்தாங்கல் ரோடு ஆண்கள் விடுதி, மந்தைவெளி கிராம நிர்வாக அலுவலகம், கருணாபுரம் சுகாதார நிலையம் உள்பட 15 இடங்களில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த முகாமை நகராட்சி ஆணையர் குமரன் துவக்கி வைத்தார். முகாமில் பங்கேற்று முதல் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் ஆண்கள் மற்றும் பெண்களை ஊக்குவிக்கவும், நகராட்சி நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிடும் வகையிலும் ஆண்களுக்கு 1050 பேருக்கு தலா ஒரு லிட்டர் பெட்ரோல் வழங்குவதற்கான டோக்கனும், பெண்களுக்கு 1500 பேருக்கு 100 ரூபாய் மதிப்புள்ள சில்வர் தட்டு வழங்கப்படுவதாக ரோட்டரி சங்கம், அனைத்து வியாபாரிகள் சங்கம், நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம், பெட்ரோல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்து இருந்தது. அதன்படி முகாமில் ஆண்கள், பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு பரிசுகளை பெற்றனர்.இதில் மாவட்டம் முழுவதும் நேற்று மொத்தம் 48 ஆயிரத்து 733 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. …

The post கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 529 இடங்களில் தடுப்பூசி முகாம்-ஆட்சியர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Kallakurichi district ,Kallakkuruchi ,District Administration ,People's Welfare Department for Corona Vaccination ,Kallakkuruchasi District ,Kolakkuruchi District ,
× RELATED உளுந்தூர்பேட்டையில் அதிமுக முன்னாள்...