×

மனநலம் பாதித்தவரை மீட்டு தந்தையிடம் ஒப்படைப்பு

அரியலூர், அக். 25: அரியலூரில் மனநலம் பாதிக்கப்பட்டவரை மீட்டு அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது. அரியலூர் பஸ் நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் சுற்றி திரிந்தார். இதையடுத்து அவரை மீட்டு விளாங்குடியில் உள்ள வேலா கருணை இல்லத்தில் போலீசார் சேர்த்தனர். பின்னர் அந்த நபரை கருணை இல்லத்தை சேர்ந்தவர்கள் பராமரித்து வந்தனர்.

இந்நிலையில் அவரை பற்றி விசாரித்ததில் உடையார்பாளையம் தாலுகா குண்டவெளி கிராமம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த லட்சுமணனின் மகன் உதயசெல்வம் (40) என்பதும், அவர் காணாமல் போயிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து உதயசெல்வத்தை அவருடைய தந்தை லட்சுமணனிடம் அரியலூர் சரக போலீஸ் டிஎஸ்பி திருமேனி, அரியலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் முன்னிலையில் வேலா கருணை இல்ல காப்பாளர் விமலாதேவி ஒப்படைத்தார்.

Tags :
× RELATED மாணவ, மாணவிகள் 10ம் வகுப்பு...