×

தேவகோட்டை பள்ளி துப்புரவு பணியாளர்களுக்கு 5 மாதமாக சம்பளம் வழங்கவில்லை

தேவகோட்டை, அக்.25: தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் 130க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளுக்கு துப்புரவுப்பணியாளர்கள் உள்ளனர். நிரந்தரப்பணியிடம் இல்லை. விதவைகள், ஆதரவற்ற முதியோர்களைக் கொண்டு துப்புரவுப்பணிகள் நடக்கிறது. சம்பளம் ஆயிரம் ரூபாய். பொருட்கள் வாங்குவதற்கு ஐநூறு ரூபாய், ஐநூறு ரூபாய் சம்பளம். பொருட்கள் வாங்குவதற்கு 250 ரூபாய் என இரண்டு வெவ்வேறு விதங்களில் வழங்குகின்றனர். ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகம் மூலம் அரசு நிதிகள் ஒதுக்கி அந்நிதிகளை அந்தந்த ஒன்றிய அலுவலகங்களுக்கு அனுப்புகிறது. ஒன்றிய அலுவலகத்தில் இருந்து அந்தந்த பள்ளிகளுக்கென தொடங்கப்பட்டிருக்கும் வங்கிக்கணக்கில் பணம் அனுப்பி வைப்பர். அதனை பள்ளித்தலைமை ஆசிரியர் (செயலாளர்), மாணவர்களின் பெற்றோரில் ஒருவர்(தலைவர்) இரண்டு பேரும் கையெழுத்திட்டு பணத்தை துப்புரவுப்பணியாளர்களுக்கு கொடுத்து வருகின்றனர். அரசு நிதி மூன்று மாதங்களுக்கு ஒரு முறையே கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பள்ளித்தலைமையாசிரியர் தனது சம்பளப்பணத்தில் இருந்து கொடுத்து பின்னர் நிதி வரும் சமயம் அதனை ஈடு செய்து கொள்வது வழக்கம். தற்போது கடந்த 5 மாத காலமாக துப்புரவுப் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.

இது குறித்து ஒன்றிய அலுவலகத்தில் தொடர்பு கொண்டு கேட்டதில், இன்னும் அரசு நிதி எங்களுக்கு வழங்கப்படவில்லை. நிதி வந்தபின்னர் தான் நாங்கள் கொடுக்க இயலும். நிதி வந்ததும் பட்டுவாடா தாமதம் இன்றி வழங்கி விடுவோம். என்றனர்.
 இது குறித்து பாதிக்கப்பட்ட துப்புரவுப்பணியாளர்கள் கூறுகையில், எங்களுக்கு சம்பளம் கிடைப்பதோ 500, 1000 அதனையும் 5 மாதமாக தராமல் அரசு மெத்தனம் காட்டி வருவது வேதனை அளிக்கிறது. நாங்கள் தினக்லியாளர்கள். எங்கள் நிலையை எடுத்துக் கேட்க முடியவில்லை. அரசு எங்களின் நிலையை எண்ணி அந்தந்த மாதம் சம்பளம் கிடைக்கச் செய்ய வழி வகை செய்யவேண்டும் என கண்ணீர் மல்க கூறுகின்றனர். பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க அறிவுறுத்தல்சிவகங்கை, அக்.25: தீபாவளி பண்டிகையையொட்டி கவனக்குறைவு, அலட்சியத்தியால் விபத்து ஏற்படாமல் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிக்க பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நீதிமன்ற உத்தரவின்படி அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பு, குறுகிய தெரு, மக்கள் அதிகமாக உள்ள இடங்கள், வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனை, பெட்ரோல் பங்க், கேஸ் குடோன், குடிசைப்பகுதி மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். பட்டாசு வெடிப்பதற்கு முன் வாளியில் நீர் மற்றும்

மணல் உள்ளிட்ட தேவையான பாதுகாப்பு வசதிகள் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். பெரியவர்கள் மேற்பார்வையிலேயே குழந்தைகள் பட்டாசு வெடிக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் பட்டாசு வெடிப்பதால் தீ விபத்துகள் ஏதும் ஏற்பட்டால் 101 மற்றும் 04575 240301 ஆகிய எண்களில் உடனடியாக தகவல் தெரிவிக்கலாம். மாவட்டம் முழுவதும் தீயணைப்பு வசதிகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தென் மண்டலத்தில் 491 பட்டாசு கடைகளுக்கு இந்த ஆண்டு தடையின்மை சான்று தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையால் வழங்கப்பட்டுள்ளது. தீயணைப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்ற அரசு துறைகளுடன் இணைந்து முன் கூட்டியே எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.  


Tags : Devakottai ,school cleaning staff ,
× RELATED தேவகோட்டையில் 1500 மதுபாட்டில்கள் பறிமுதல்