×

ஆராய்ச்சிகள் சமுதாயத்திற்கு பயன்பட வேண்டும் துணைவேந்தர் வேண்டுகோள்

காரைக்குடி, அக். 25:மாணவர்கள் மேற்கொள்ளும் ஆராய்ச்சி முடிவுகள் சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் அமைய வேண்டும் என அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் என்.ராஜேந்திரன் தெரிவித்தார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை சார்பில் கணினி அறிவியல் என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கு துவக்கவிழா நடந்தது. துறை தலைவர் ராமராஜன் வரவேற்றார். துணைவேந்தர் என்.ராஜேந்திரன் தலைமை வகித்து பேசுகையில், ‘இப்பல்கலைக்கழகம் க்யூஎஸ் தரவரிசை பட்டியலில் இந்திய அளவில் 24வது இடத்தை பெற்றுள்ளது. இந்த விருதை பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வழங்கி 100 கோடி ரூசா நிதியுதவி கற்பித்தல், ஆராய்ச்சி, விரிவாக்க பணிகளுக்கு செலவிடப்படுகிறது. 123 முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர்களுக்கு மாதம் ரூ 20000ம், 35 முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர்களுக்கு ரூ. 75000ம் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

மாணவர்கள் மேற்கொள்ளும் ஆராய்ச்சி முடிவுகள் சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் அமைய வேண்டும். மாணவர்களும், ஆராய்ச்சியாளர்களும் தொழில்நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளுக்கு தகுந்த வகையில் தங்கள் திறன்களை வளர்த்தக் கொள்ள வேண்டும்’ என்றார். இதில் அமெரிக்கா கனக்டிக்கட் பல்கலைக்கழக பேராசிரியர் ராஜசேகரன், சான்டியாயோ தேசிய பல்கலைக்கழக பேராசிரியர் சுப்ரமண்யா, சென்னை மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா துணை இயக்குநர் கோகுல கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேராசிரியர் தினகரன் நன்றி கூறினார்.

Tags :
× RELATED காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனையில்...