×

பெர்ன்ஹில்-தீட்டுக்கல் சாலை பழுது வாகன ஓட்டிகள் அவதி

ஊட்டி,  அக்.25:கடந்த வாரம் பெய்த மழையால் பெர்ன்ஹில்-தீட்டுக்கல் செல்லும் சாலை  பழுதடைந்துள்ளதால் வாகன ஓட்டுநர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். நீலகிரி  மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த கன மழையால் ஊட்டி அருேயுள்ள பெர்ன்ஹில்  பகுதியில் இருந்து தீட்டுக்கல் செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு சாலை  இரண்டாக உடைந்துள்ளது. மேலும், சாலை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால்,  இவ்வழித்தடத்தில் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வழித்தடத்தில் பள்ளி மாணவர்கள் வாகனங்கள் அதிகளவு செல்லும் நிலையில்,  இதை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள்  வலியுறுத்தியுள்ளனர்.

Tags : motorists ,avadi ,
× RELATED சென்னை ஆவடியில் சித்த மருத்துவர்...