×

பருப்பில்லா பாயாசம், சர்க்கரையில்லா கேசரி

கோவை, அக். 24: தீபாவளிக்கு ரேஷன் கடைகளில் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் வழங்க  வலியுறுத்தி கோவையில் பருப்பில்லாத பாயாசம்,  சர்க்கரை இல்லாத கேசரி செய்து நேற்று மாதர் சங்கத்தினர் நூதன  போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி ரேஷன் கடைகளில் அனைத்து வித அத்தியாவசிய பொருட்களையும்  வழங்க வலியுறுத்தி கோவை பார்க் வீதியில் உள்ள மாதர் சங்கத்தின் மாவட்ட குழு அலுவலகத்தில் இந்த போராட்டம் நடைபெற்றது. இதுகுறித்து மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராதிகா கூறியதாவது:தொழில் நசிவு மற்றும் பொருளாதார மந்த நிலை காரணமாக தொழில் நகரான கோவை மக்கள் கையில் பணமில்லாமல் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதன் காரணமாகவே கோவை நகர கடைவீதிகளில் பண்டிகை காலத்தில்கூட கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இன்னும் இரு தினங்களில் தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில், ஏழை எளிய மக்களின் கடை வீதியாய் இருக்கிற ரேசன் கடைகளில் இதுவரை பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய அத்தியாவசிய பொருட்களான பருப்பு, சக்கரை, எண்ணெய் போன்றவை வழங்கவில்லை. உடனடியாக வழங்கக்கோரி அரசின் கவனத்தை ஈர்க்க இந்த நூதன போராட்டத்தை நடத்தியுள்ளோம். என்றார். நீர்நிலைகள், சாலை ஓரங்களில் குப்பைகள் கொட்டினால் நடவடிக்கைகோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் டெங்கு காய்ச்சல் பரவமால் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதனடிப்படையில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் டெங்கு எதிர்ப்பு நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சுகாதாரப்பணியாளர்கள், பணியாளர்கள் மூலமாக டெங்கு காய்ச்சல் பரப்பும் ஏடீஎஸ் கொசுக்கள் உருவாக்கும் இடங்களை கண்டறிந்து அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்கள், பள்ளிகள், கல்லூரிகள் பல்வேறு விடுதிகள், அரசு மற்றும் பொது சுகாதார வளாகங்கள், தொழிற்சாலைகள், ரயில் நிலையம், சினிமா தியேட்டர், தீம் பார்க் மற்றும் பொழுதுபோக்கு வளாகங்கள், திருமண மண்டபம் போன்ற பகுதிகளில் தேங்கும் குப்பைகளை உடனடியாக அகற்றவும், குப்பைகள் சேராவண்ணம் தூய்மையாக சுகாதாரமாக பராமரிக்கவும் பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு வேண்டப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் நீர்நிலைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் குப்பைகள் கொட்டுவது அதிகரித்து வருகிறது. நீர்நிலைகள் மற்றும் அரசு பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதன் மூலம் நிலத்தடி நீர் மாசடைவதுடன் பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள நீர்நிலைகள், சாலை ஓரங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் குப்பைகள் கொட்டக்கூடாது. இவ்வாறு குப்பைகள் கொட்டுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.


Tags : kesari ,
× RELATED திடீர் சாம்பார், திடீர் கேசரி போல்...