×

முதியவர் மீது தாக்குதல்

மார்த்தாண்டம், அக். 25: மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை சின்ன தோட்டத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(74). அதே பகுதியை சேர்ந்தவர் அனிஸ். இவர் ராமகிருஷ்ணன் வீட்டின் முன் நின்று தகாதவார்த்தைகளால் பேசி உள்ளார். இதை ராமகிருஷ்ணன் தட்டி கேட்டார். இதில் அவர்களிடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் ராமகிருஷ்ணன் நேற்று சின்னதோட்டம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அனிஸ், ராமகிஷ்ணனிடம் தகராறு செய்து, அவரை கம்பால் தாக்கி உள்ளார். இதில் காயம் அடைந்த ராமகிருஷ்ணன் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Tags :
× RELATED கண்டன்விளையில் பைக் விபத்தில் வாலிபர் படுகாயம்