×

கண்டன்விளையில் பைக் விபத்தில் வாலிபர் படுகாயம்

திங்கள்சந்தை, மே 8: கருங்கலை அடுத்த கப்பியறை அருகே செல்லங்கோணம் புதுக்காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ஆன்றிசன் மகன் ஆதர்ஷ்(19). டிரைவர். சம்பவத்தன்று இரவு இவர் திங்கள்நகரில் இருந்து தோட்டியோடு நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். கண்டன்விளை பகுதியில் சென்றபோது ஆதர்ஷ் திடீரென நிலைதடுமாறி பைக்குடன் கீழே விழுந்தார். சாலையோரம் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஓடுகளின் மீது மோதி படுகாயம் அடைந்த அவரை அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் சுங்கான்கடையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆதர்ஷின் உறவினர் ஷீபா ரெத்தினமலர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கண்டன்விளையில் பைக் விபத்தில் வாலிபர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Kandanvilai ,Anderson ,Adarsh ,Chellagonam Pudukattuvilai ,Kappiara ,Karungalai ,Dingalnagar ,Thothiod ,
× RELATED டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 700...