திருமங்கலம் அருகே மழைக்கு மூன்று வீடுகள் இடிந்து சேதம்

திருமங்கலம், அக்.25: திருமங்கலம் அருகே பலத்த மழைக்கு மூன்று வீடுகள் இடிந்து சேதமடைந்தது. திருமங்கலம் அருகே பலத்த மழைக்கு வீடு இடிந்து இரண்டு பேர் படுகாயமடைந்தனர். திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. சுமார் ஓரு மணி நேரம் பெய்த மழையால் தாழ்வான இடங்களில் தேங்கிய மழைநீரினால் நகரின் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருமங்கலத்தை அடுத்துள்ள கிழவனேரியை சேர்ந்த விவசாயி கூடாண்டி(55). திருமணமாக வில்லை. இவருடன் இவரது தங்கைகள் விஜயா(40), அழகம்மாள்(35) வசித்து வருகின்றனர். விஜயாவிற்கு திருமணமாகவில்லை. அழகம்மாளின் கணவர் இறந்ததால் சகோதரர் கூடாண்டியுடன் வசித்து வந்தார். இரவு வீட்டில் இவர்கள் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது மழையால் இவர்களது வீடு இடிந்து விழுந்தது. இதில் கூடாண்டி, விஜயா இருவரும் காயமடைந்தனர். கிராமமக்கள் இவர்களை மீட்டு திருமங்கலம் அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அழகம்மாள் வெளியே ஓடிவந்ததால் தப்பினார். தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோல் ஆலம்பட்டி சக்திவேல், உலகாணி சமத்துவபுரத்தை சேர்ந்த முனியம்மா ஆகியோரது வீடும் சேதமடைந்தது.

Tags : houses ,Thirumangalam ,
× RELATED 40 ரவுடிகளின் வீடுகளில் வெடிகுண்டு சோதனை