×

விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும் கொங்கு மக்கள் முன்னணி கோரிக்கை

பழநி, அக். 25: விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டுமென கொங்கு மக்கள் முன்னணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.பழநி அருகே கருப்பணக்கவுண்டன்வலசில் கொங்கு மக்கள் முன்னணியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பழநியில் சுதந்திர போராட்ட வீரர் தீரன்சின்னமலைக்கு தமிழக அரசு திருஉருவச்சிலை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் கூட்டுறவு- தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள அனைத்து வகை விவசாய கடன்களையும் முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும்.ஏரி, குளங்கள் மற்றும் பட்டா நிலங்களில் அனுமதியின்றி மணல் அள்ளுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிறையில் இருக்கும் 7 தமிழர்களை ஆளுநர் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும். தீண்டாமை வன்கொடுமை சட்டத்தை தவறுதலாக பயன்படுத்தி காவல்நிலையத்தில் பொய் புகார் கொடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : abolishment ,Kongu ,
× RELATED சேறும், சகதியுமான மஞ்சனக்கொரை சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை