×

தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு கோரிக்கை பழநி கல்லூரியில் டெங்கு விழிப்புணர்வு

பழநி, அக். 25: பழநி அருள்மிகு பழநியாண்டவர் கலை- பண்பாட்டு கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. முதல்வர் பிரபாகர் தலைமை வகித்தார். தமிழ்த்துறத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். இளைஞர் செஞ்சிலுவை சங்க அலுவலர் ராஜவர்மன் வரவேற்று பேசினார். பழநி அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவர் டாக்டர்.மகேந்திரன் டெங்கு காய்ச்சலுக்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். தொடர்ந்து நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மனோகரன், மனோகரன், கங்காதரன், கௌதமன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags : Palani College ,
× RELATED பழநியில் 148 அடி நீளத்தில் 540 ஓவியங்கள் -கல்லூரி மாணவி சாதனை