×

பழநியில் 148 அடி நீளத்தில் 540 ஓவியங்கள் -கல்லூரி மாணவி சாதனை

பழநி :  திண்டுக்கல் மாவட்டம், பழநி அருள்மிகு பழநியாண்டவர் கலை கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருபவர் மாணவி சோபியா. கொரோனா விடுமுறை நேரத்தில் மாணவி சோபியா ‘எனது பூமி’ என்ற தலைப்பில் 148 அடி நீளத்தில் 540 ஓவியங்களை வரைந்துள்ளார். உலக நாடுகளின் தேசியக்கொடிகள், தேசத்தலைவர்கள், முன்னாள் மற்றும் இன்னாள் முதல்வர்கள், இயற்கை காட்சிகள், விவசாயம், தமிழர் பண்பாடு தொடர்பான ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. இந்த ஓவியம் நேற்று பழநி அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் குணசேகரன் தலைமை வகித்தார். சூப்பர் ஆர்ட்ஸ் அகாடமி நிறுவனர் சின்னப்பா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அன்புச்செல்வன் வரவேற்று பேசினார். ஏராளமான மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் 148 அடி நீள ஓவியத்தை பார்வையிட்டு மாணவியை பாராட்டினர்….

The post பழநியில் 148 அடி நீளத்தில் 540 ஓவியங்கள் -கல்லூரி மாணவி சாதனை appeared first on Dinakaran.

Tags : Palani - College ,Sophia ,Arulmiku Palaniyandavar Arts College ,Palani ,Dindigul district ,Dinakaran ,
× RELATED நியூசிலாந்து அபார வெற்றி