×

சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு திண்டுக்கல் நாகல்நகரில் கைப்பிடியில் கை வைத்தாலே ‘ஷாக் அடிக்குது’

திண்டுக்கல், அக். 25: திண்டுக்கல் நாகல்நகர் ரயில்வே மேம்பால படிக்கட்டின் இரும்பு கைப்பிடியில் கை வைத்தாலே ஷாக் அடிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். திண்டுக்கல் நாகல்நகர் ரயில்வே மேம்பாலம் படிக்கட்டில் இரும்பு கைப்பிடி உள்ளது. நத்தம் சாலைக்கு செல்வோர் இந்த படிக்கட்டு வழியாக தான் செல்வர். கடந்த சில நாட்களாக இவ்வழியே செல்வோர் பாலத்தில் ஏறும் போது இரும்பு கம்பியை தொட்ட உடனே, ‘அய்யோ, அம்மா’ என சொல்லுகின்றனர். காரணம் கம்பியில் ஷாக் அடிப்பதுதான். திண்டுக்கல்லில் தொடர் மழை காரணமாக ஏதாவது வயரில் கோளாறு ஏற்பட்டு இந்த கம்பியில் மின்சாரம் பாயும் என தெரிகிறது. எனவே மின்வாரியம கேமரா வைத்த காவல்துறை, தெரு லைட் வைத்த மாநகராட்சி, கேபிள் - இணையதளம் என இவர்களில் யாருடைய வயர்களால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சம்மந்தப்பட்ட துறைகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என திண்டுக்கல் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம், நாகல்நகர் அனைத்து வியாபாரிகள் பாதுகாப்பு நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளன

Tags : Tourist Expectations Dindigul ,
× RELATED பழநி அடிவாரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்: நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை