×

டெங்கு, வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம்

 

மூணாறு, மே 27: மாவட்டத்தில் இந்த வாரம் 171 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆண்டு காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட கடும் வேனல் சூடும் தற்போது பெய்யும் கோடை மழையும் காய்ச்சல் அதிகரிக்க காரணம் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த ஆண்டு நான்கு பேருக்கு எலிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

25 பேர் எலிக்காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் இந்த ஆண்டு கூடுதல் ரிப்போர்ட் செய்துள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். சுகாதாரத்துறை அறிக்கையின் படி அரக்குளம் (வார்டு-7), பீர்மேடு (வார்டு-6), வண்டிப்பெரியார் (வார்டு-11), குமுளி (வெள்ளாரம்குன்னு), கரிமண்ணூர் ஆகிய பகுதிகள் டெங்கு ஹாட் ஸ்பாட் என கண்டறியப்பட்டுள்ளது.

The post டெங்கு, வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Munnar ,
× RELATED உடல் எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு