×

மருதுபாண்டியர் குருபூஜையை முன்னிட்டு பொது மருத்துவ முகாம்

திருப்புத்தூர், அக். 24: திருப்புத்தூரில் மருதுபாண்டியர்களின் 218வது குருபூஜையை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.மருதுபாண்டியர்களின் 218வது குருபூஜையை முன்னிட்டு மருதீஸ்வரர் ஆன்மீக சேவை சங்கம், மருதுபாண்டியர் நல அறக்கட்டளை, திருப்புத்தூர் அகமுடையார் உறவின்முறை ஆகியவை சார்பில், பொதுமக்களுக்கான இலவச சிறப்பு பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்மருத்துவ முகாமிற்கு மருதீஸ்வரர் ஆன்மீக சேவை சங்கத்தலைவர் மோகன் தலைமை வகித்தார். திருப்புத்தூர் அகமுடையார் சங்கத் தலைவர் ராஜசேகரன், செயலாளர் வயிரவசுந்தரம், பொருளாளர் விஜயசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுப்பிரமணியன் வரவேற்றார். மதுரை சரவணா பல்முகச் சிறப்பு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முகாமில் ஈடுபட்டிருந்தனர். சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனையும், உயர் மருத்துவ ஆலோசனையும் வழங்கபட்டது. முகாம் முடிவில் பஞ்சாட்க்ஷரம் நன்றி கூறினார்.

Tags : Medical Camp ,Marudhabandi Kurupuja ,
× RELATED கால்நடை மருத்துவ முகாம்