×

கொசுப்புழு உற்பத்திக்கு காரணமான சாயப்பட்டறைகளுக்கு அபராதம்

திருப்பூர், அக். 24:   திருப்பூர் முதலிபாளையத்தில் கொசுப்புழு உற்பத்திக்கு காரணமான சாயப்பட்டறைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. திருப்பூர் அருகே முதலிபாளையம் ஊராட்சியில், டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவியுள்ளது. அங்கு, தண்ணீர் தேங்காமல் தடுக்காததே இதற்கு காரணம் என, தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து ‘சிட்கோ’ வளாகத்தில் நேற்று முன்தினம் சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் பி.டி.ஓ. கனகராஜ் தலைமை வகித்தார். துணை இயக்குனர் ஜெயந்தி, பூச்சியியல் வல்லுனர் சேகர், துணை பி.டி.ஒ. இந்துமதி உள்ளிட்டோர் பேசினர். தொடர்ந்து, அதிகாரிகள் குழுவினர், அங்குள்ள நிறுவனங்களில், திடீர் ஆய்வு நடத்தினர். ஒரு பனியன் நிறுவனத்தில், டெங்கு பரப்பும் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு, ரூ.1.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அதே போன்று, பொன்னாபுரம் பகுதியில் உள்ள சாயப்பட்டறைக்கும் ரூ.2 லட்சம், அங்குள்ள மகளிர் விடுதிக்கு ரூ .ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அங்குள்ள வீடுகளில் ஆய்வு நடத்தியபோது, மொட்டை மாடியில், மழைநீர் தேங்கி, அதிக அளவு கொசுப்புழு உற்பத்தியாகிருப்பது தெரியவந்தது. இதனால் அதிகாரிகள், வீட்டின், குடிநீர் இணைப்பை துண்டித்தனர். இந்த நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED மழை நீரை சேகரிப்பதற்காக நாட்டு...