×

உயிரி கட்டுப்பாட்டு முறை விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி

திருச்சி, அக்.24: சிறுகமணியில் விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் உயிரிக் கட்டுப்பாட்டு முறை குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினர். தஞ்சை, ஈச்சங்கோட் டை, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள், கிராமப்புற வேளாண்மை பணி அனுபவத் திட்டத்திற்க்காக, சிறுகமணி கிராமத்திற்கு சென்று அங்குள்ள விவசாயிகளுக்கு உயிரியல் கட்டுப்பாட்டு முறையில் பயிர் பாதுகாப்பு குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினர். விவசாயிகளுக்கு வயலில் சூடோமோனாஸ் என்ற நுண்ணுயிரியைப் பயன்படுத்தி பயிர் நோய்களை கட்டுப்படுத்தும் முறை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் நாற்றுகளின் வேரை நனைத்தல், வேர்களை சூடோமோனாஸ் கரைசலில் ஒரு எக்டருக்கு 2.5 கிலோ வீதம் அரை மணி நேரம் குறைந்தது ஊற வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் முலம் பயிர்களை நோய்களிலிருந்து பாதுகாத்து வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகிறது. எனவே இது உயிரி உரமாக இருப்பதால் மண்ணின் வளம் மேம்படுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

Tags :
× RELATED லால்குடி பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு ஆதார் பதிவு