×

அரியலூரில் திமுக சார்பில் மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கல்

அரியலூர், அக். 24: அரியலூர் பேருந்து நிலையத்தில் நகர திமுக சார்பில் டெங்கு, மர்மகாய்ச்சல் பரவுவதை தடுக்க பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அரியலூர் நகர திமுக செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் பங்கேற்று பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினார். நிகழ்ச்சியில் மாலா தமிழரசன், பாலு, குணா, பாபு, கதிரவன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Ariyalur ,DMK ,
× RELATED அரியலூரில் முன்னேற்பாடு பணி ஆய்வு...