×

ஆண்டிமடத்தில் இன்று காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

அரியலூர், அக். 24: ஆண்டிமடத்தில் காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்ற நடக்கிறது. இதில் நுகர்வோர் பங்கேற்று குறைகளை தெரிவித்து பயனடைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆண்டிமடம் தாசில்தார் அலுவலகத்தில் அரியலூர் மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று மாலை 3 மணிக்கு நடக்கிறது. மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை வகிக்கிறார்.

கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், காஸ் முகவர்கள் கலந்து கொள்கின்றனர். எனவே காஸ் நுகர்வோர்கள் சமையல் காஸ் தொடர்பான குறைகள் இருப்பின் கூட்டத்தில் பங்கேற்று தங்களது புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்து பயனடையலாம். இவ்வாறு அரியலூர் கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.

Tags : Gaz Consumer Grievance Meeting ,Antimatam Today ,
× RELATED கும்பகோணத்தில் இன்று காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்