×

அனுமதிக்காத இடத்தில் பட்டாசு கடைகள்-ஆளுங்கட்சியினர் அடாவடி

குன்னூர், அக். 24: குன்னூர் நகரில் அனுமதிக்காத இடத்தில் பட்டாசு கடைகள் வைத்து ஆளுங்கட்சியினர் அடாவடி செய்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் பட்டாசு கடைகள் வைக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு விதிமுறைகளை விதித்துள்ளது. இதில் குன்னூர் வருவாய்த்துறை சார்பில் உழவர் சந்தை பகுதியில் பட்டாசு கடைகள் வைப்பவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ஆளுங்கட்சியை சேர்ந்த சிலர் அரசின் உத்தரவை மீறி பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் பட்டாசு கடைகள் வைத்து உள்ளனர். இவை பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குன்னூர் நகரில் முக்கிய பகுதியான வி.பி. தெருவில் தீபாவளி உள்ளிட்ட விழா காலங்களில் மக்கள் அதிக வந்து செல்கின்றனர். அந்த பகுதியில் பட்டாசு  கடைகள் வைக்க மின் வாரியம், காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் அதனை மீறி ஆளுங்கட்சியை சேர்ந்த சிலர் பட்டாசு கடைகளை அமைத்துத் வருகின்றனர். இதனால் விபத்து ஏற்பட்டால்  உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் பொது மக்கள் அதிகம் கூடும் இடத்தில் பட்டாசு கடைகள் வைக்க அதிகாரிகள் எவ்வாறு அனுமதி வழங்கினர் என ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : area ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...