×

வேதாரண்யத்தில் பாழடைந்து கிடக்கும் வேளாண் அலுவலக கட்டிடம்

வேதாரண்யம், அக்.24: வேதாரண்யத்தில் இடிந்த நிலையில் பாழடைந்து இருக்கும் பழைய வேளாண்மைத்துறை கட்டிடத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் பயணியர் மாளிகைக்கு செல்லும் சாலையில் உள்ள வேளாண்மைத் துறை அலுவலகம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. வேதாரண்யத்தில் உள்ள வேளாண்மை அலுவலக கட்டிடத்திற்கு செல்லும் சாலை கூட இல்லாத நிலையிலும் கட்டிடத்தின் முன்பு புதர்களும் செடிகொடிகளும் மண்டிக் கிடக்கிறது. கட்டிடத்தின் உள்ளே இருக்கும் அனைத்து அறைகளின் மேற்கூரைகளில் காரைகள் பெயர்ந்தும், சுவர்கள் விரிசல் கண்டும் எப்போது யார் தலையில் விழும் என்ற நிலையில் உள்ளது.

தற்போது பெய்துள்ள மழையில் அலுவலகத்தில் உள்ளே மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் ஊழியர்கள் பணியாற்றுவது மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். வேளாண்மை துறையின் தோட்டக்கலை துறையின் இணைந்து செயல்படும் அலுவலகத்தில் நாள்தோறும் நூற்றுக்கணக்கில் வந்து செல்லும் விவசாயிகளுக்கும் அலுவலகத்தில் பணியாற்றும் ஆண் பெண் இருவருக்கும் போதுமான கழிப்பறை வசதி இல்லை.
எனவே அரசு புதிய கட்டிடம் கட்ட போதுமான இடத்தை தேர்வு செய்துள்ள நிலையில், வேதாரண்யம் வேளாண்மைத் துறைக்கு புதிய அலுவலக கட்டிடம் கட்டிக் கொடுத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் உயிர் காக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Office Building ,
× RELATED நூறாண்டுகளை கடக்கும் பாளை மண்டல...