×

ரேஷன் கடைகளை பாதுகாக்ககோரி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் 3 இடங்களில் நடந்தது

தஞ்சை, அக். 24: ரேஷன் கடைகளை பாதுகாக்க வலியுறுத்தி அம்மாப்பேட்டை ஒன்றியத்தில் 3 இடங்களில் மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்படி இராராமுத்திரைக்கோட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வசந்தி, ஒன்பத்துவேலியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்கிரேட், கொம்மஞ்சேரியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஜோஸ்பின் மேரி ஆகியோர் தலைமை வகித்தனர். மாதர் சங்க மாவட்ட தலைவர் கலைச்செல்வி கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் ரேஷன் கடைகளை பாதுகாக்க வேண்டும். ரேஷன் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், அத்யாவசிய பொருட்கள் அனைத்தையும் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். வறுமைக்கோட்டு பட்டியலின் பெயரில் ரேஷன் கார்டுகளை குறைக்க கூடாது. அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய், சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட அத்யாவசிய பொருட்களை குறைக்காமல் வழங்க வேண்டும். 3 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். ஒரே குடும்ப அட்டை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.
மாதர் சங்க ஒன்றிய தலைவர் வெற்றிச்செல்வி, ஒன்றிய செயலாளர் சசிமதி, ஒன்றிய பொருளாளர் சைலஜா மற்றும் மாதர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags : protest ,locations ,Mathi Sangar ,ration shops ,
× RELATED சென்னை விமான நிலையம் உள்ளிட்ட 3...