×

தென்காசி பள்ளி ஆண்டு விழா

தென்காசி, அக். 24: தென்காசி ராம் நல்லமணி வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் 8ம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது. டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் ஆடிவேல், இலத்தூர் எஸ்ஐ முத்துக்கிருஷ்ணன், கடையநல்லூர் அரசு கல்லூரி முதல்வர் வேலம்மாள்முத்தையா ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். கல்வி குழுமங்களின் செயலாளர் பத்மாவதி மணிமாறன் வரவேற்றார். முதல்வர் பீட்டர்அந்தோணி சுரேஷ் ஆண்டறிக்கை வாசித்தார். நல்லமணி கல்வி குழுமங்களின் சேர்மன் மணிமாறன் சிறப்புரை ஆற்றினார். விழாவில் கல்வி மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. துணை முதல்வர் சரவண கார்த்திக் நன்றி கூறினார்.

Tags : Tenkasi School Anniversary ,
× RELATED 2 கோயில்களில் நகை பணம் கொள்ளை