×

நகராட்சி சிஎஸ்ஐ பள்ளியில் கவிஞர் பிறந்தநாள் விழா

குமாரபாளையம்,அக்.23: குமாரபாளையம்  நகராட்சி சிஎஸ்ஐ நடுநிலைப்பள்ளியில், நாமக்கல் கவிஞர் இராமலிங்கத்தின்  பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர் சுகந்தி தலைமை  தாங்கி பேசினார். விடியல் அமைப்பின் தலைவர் பிரகாஷ், கவிஞரின் பெருமைகளை  மாணவ, மாணவிகளுக்கு விளக்கி பேசினார். பள்ளியில் கவிஞர் ராமலிங்கத்தின்  மேன்மை குறித்து கவிதை, கட்டுரை, வினாடிவினா மற்றும் பேச்சு போட்டிகள்  நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டது. விழாவில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags : Poet ,Birthday ,Municipal CSI School ,
× RELATED 'உள்ளத்தில் என்றும் நிறைந்திருக்கும்...