×

கபடியில் இன்ஜி. கல்லூரி வெற்றி

தேனி, அக்.17: அண்ணா பல்கலைக்கழக இன்ஜியரிங் கல்லூரிகளுக்கிடையே நடந்த 17வது மண்டல அளவிலான கபடி போட்டியில் ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரி அணி வெற்றி பெற்றது. அண்ணா பல்கலைக்கழகத்தின் 17வது மண்டல அளவிலான கபடி போட்டி திண்டுக்கல் எஸ்.பி.எம் இன்ஜினியரிங் கல்லூரியில் நடந்தது. இதில் 27 கல்லூரிகள் கலந்து கொண்டன. இதில் ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரி அணி இரண்டாம் இடத்தை பிடித்து வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற கபடி வீரர்களை கல்லூரி குழுமத்தின் நிர்வாகத் தலைவர் மோகன், முதன்மை செயலாளர் பிரசன்னவெங்கடேசன், நிர்வாகத் துணைத் தலைவர்கள் ரேணுகா, சுதாமீனாட்சி, கல்லூரி முதல்வர் பாண்டிகுமார், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் காசிமாயன் ஆகியோர் பாராட்டினர். உடற்கல்வி இயக்குநர் சிவா நன்றி கூறினார்.

Tags : Kapadiel Inge ,
× RELATED சாலையோர கடைகளில் தொடர் திருட்டு போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை