×

பேரிடர் குறைப்பு தின ஊர்வலம்

சிங்கம்புணரி, அக்.16:  சிங்கம்புணரியில் வருவாய் துறை சார்பாக சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை தாசில்தார் பஞ்சவர்ணம் தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மாணவர்கள் மழை கால பாதுகாப்பு, நில நடுக்கம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் கடைபிடிக்க வேண்டிய வாசகங்களை கையில் ஏந்தி ஊர்வலம் வந்தனர். இதில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள், வருவாய் ஆய்வாளர் சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.Tags : Disaster Reduction Day Procession ,
× RELATED மானாமதுரை வந்த வைகை தண்ணீர்