×

பிளஸ்2 மாணவி மாயம்

கோவை, அக்.16: சூலூர் அருகே உள்ள வதம்பச்சேரி சவுடேஸ்வரி நகரை சேர்ந்த ஒருவரது 17 வயது மகள் வதம்பச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். கடந்த 13ம் தேதி பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றவர் பள்ளிக்கும் செல்லவில்லை, வீடும் திரும்பவில்லை. அக்கம் பக்கத்தினர் உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. எங்கோ மாயமாகி விட்டார். இது குறித்து அவரது பெற்றோர் நெகமம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து மாணவி கடத்தப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED ஆன்லைன் வகுப்பு புரியாததால் பிளஸ் 2 மாணவன் தற்கொலை