×

பழநியில் வீட்டு வரியை குறைக்க கோரி மனு கொடுக்கும் இயக்கம்

பழநி, அக். 16: பழநி நகராட்சியில் வீட்டு வரியை குறைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மனு கொடுக்கும் இயக்கம் நடத்தப்பட்டது.பழநி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு வீட்டுவரி- குப்பை வரி கடுமையாக உயர்த்தப்பட்டது. தமிழகம் முழுவதுமே இதேநிலை நீடித்தது. இதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எதிர்கட்சிகளின் எதிர்ப்பிற்கு அதிமுக அரசு பணிந்தது. சட்டப்பேரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் முதல்வர் அறிவுறுத்தலின்படி வரி உயர்வு ரத்து செய்யப்படுமென அறிவித்திருந்தார். ஆனால், அறிவிக்கப்பட்டு 2 மாதங்களாகியும் இதுவரை வரிகள் குறைக்கப்படவில்லை.இதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பழநியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடந்த அக்.4ம் தேதி உழவர் சந்தை, அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் மனு பெறும் இயக்கம் நடத்தப்பட்டது.

வரிகளை குறைக்க வேண்டுமென வலியுறுத்தி பொதுமக்களிடம் மனுக்கள் எழுதி வாங்கப்பட்டது. தொடர்ந்து வீடு வீடாக சென்று மனுக்கள் எழுதி வாங்கப்பட்டன. பெறப்பட்ட மனுக்களை நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நகராட்சி ஆணையர் நாராயணனிடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச செயலாளர் சச்சிதானந்தம், முன்னாள் நகராட்சித்தலைவர் ராஜமாணிக்கம், நகரச் செயலாளர் கந்தசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் குருசாமி, நகர்க்குழு உறுப்பினர்கள் மனோகரன், கோபிநாத், கருப்பணன், செந்தில், ஷெரிப் உள்பட பலர் கலந்து கொண்டனர். மனுக்களை பெற்றுக கொண்ட ஆணையர் அவற்றை முதல்வருக்கு அனுப்பி வைப்பதாக கூறினார். மேலும், 2 முறை வீட்டு வரி உயர்வு செய்த வீடுகளுக்கு ரத்து செய்யப்படும் என்றார்.


Tags : Palani ,
× RELATED வயல்வெளி பள்ளியின் நன்மை வேளாண் துறை அட்வைஸ்