×

புதுப்பாளையம் ஊராட்சியில் பூட்டிக்கிடக்கும் கழிவறைகள்

ராசிபுரம், அக்.16: புதுப்பாளையம் ஊராட்சி பகுதியில், பூட்டிக்கிடக்கும் கழிவறைகளால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் திறந்த வெளியை நாட வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது புதுப்பாளையம் ஊராட்சி. சுமார் 12 வார்டுகளை கொண்ட பகுதியாக உள்ளது. இங்கு சுகாதாரத்தை காக்கும் வகையில், ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாக பொது கழிப்பறை 7வது வார்டில் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் உரியவகையில் பாரமரித்து வந்த ஊராட்சி நிர்வாகம் கடந்த சில மாதமாக உரிய பாரமரிப்பின்றி பூட்டி காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்த வேண்டிய அவல நிலைக்க தள்ளப்பட்டுள்ளனர். அதே போல் பெண்களுக்கான கழிவறையும், முறையாக பராமரிப்பு இன்றி பூட்டி காணப்படுகிறது. இதனால் பெண்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் பூட்டி கிடக்கும் கழிவறைகளால் பொதுமக்கள் திறந்தவெளியை அதிகம் நாட வேண்டி உள்ளது. எனவே பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், பூட்டி கிடக்கும் கழிவறைகளை உரிய முறையில் பாரமரித்து மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேரூராட்சி பகுதிகளிலும் திறந்தவெளி கழிப்பிடம் இல்லை என அறிவித்துள்ள நிர்வாகம், புதுப்பாளையம் ஊராட்சியில் பாரமரிப்பின்றி பூட்டி கிடக்கும் கழிவறைகளை திறந்து  மக்கள் சிரமத்தை போக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பல முறை புகார்கள் அனுப்பியும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றனர்.

Tags :
× RELATED அம்மாச்சி கழிவறைகள்!