×

திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்

 திருச்செங்கோடு,அக்.16: திருச்செங்கோடு நகராட்சி பகுதியில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  திருச்செங்கோடு நகராட்சி சார்பில் சேலம் ரோடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் வீடுகள் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகிறதா என்று நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தேக்கி  வைக்கப்படும் தண்ணீர் தொட்டிகளில் கொசு புழுக்களை அழிக்கும் மருந்துகள் ஊற்றப்பட்டது. மேலும் கொசுவை ஒழிக்க வீடுகள் வணிக நிறுவனங்களில் கொசு மருந்து அடிக்கப்பட்டது.  வீடுகளில் வளர்க்கப்படும் வாழை மர மட்டைகளில் தண்ணீர் தேங்கி அங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாவதை நகராட்சி அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனையடுத்து வாழை மரங்களில் மட்டை பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற நகராட்சி அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினர்.இது குறித்து திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் (பொ) சுகுமார் கூறியதாவது:   திருச்செங்கோடு நகராட்சியில் 27 ஆயிரத்து 611 குடியிருப்புகள் உள்ளன. 300 குடியிருப்புகளுக்கு ஒரு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி 93 கொசு ஒழிப்பு பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருவதால் சில வீடுகளில் வாழை மர மட்டைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் டெங்கு காய்ச்சல் வர வாய்ப்புள்ளது. ஆகையால் வாழை மர பட்டைகளில் தேங்கும் தண்ணீரை அகற்ற வேண்டும் என்றார். தொடர்ந்து பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. மற்றும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

Tags : municipality ,Tiruchengode ,
× RELATED கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை