×

ஹெல்மெட் சோதனையில் போலீசார் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு

திருவள்ளூர், அக். 16: திருவள்ளூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு, குற்றபிரிவு, நீதிமன்றம் என பல்வேறு பணிகளுக்கு அதிக அளவில் போலீசார் சென்று விடுகின்றனர். குற்றத்தடுப்பு சம்பவங்களை தடுக்கவும், திருடர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் குறைந்தளவு போலீசாரே பணியாற்றுகின்றனர்.   கடந்த சில மாதங்களாக மற்ற மாவட்டங்களை காட்டிலும் திருவள்ளூர் மாவட்டத்தில் வாகனசோதனை மற்றும் ஹெல்மெட் சோதனை என்ற பெயரில் போலீசாரின் பணிகள் திசைதிரும்பி விடுகிறது.
இருக்கும் குறைவான போலீசாரை வைத்துதான் நகரில் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களை தடுக்கவேண்டியுள்ளது. ஆனால் இது நடைமுறையில் சாத்தியப்படாததால் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் பொன்னேரி, மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் உட்பட பல பகுதிகளில் வீட்டை உடைத்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கிறது. இது, பொதுமக்கள் மற்றும் போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
எனவே அதிகரித்து வரும் குற்றங்கள் மற்றும் திருட்டுகளை தடுக்கும் வகையில் போலீசாரின் பணிகள் இடையூறின்றி நடந்திட, அவர்களின் அன்றாட அலுவல்களை மாற்றியமைக்க மாவட்ட போலீஸ் எஸ்பி., அரவிந்தன் முன்வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags :
× RELATED வெளிமாநில தொழிலாளர்களுக்கு...