3 மாதங்களாக காணாமல் போன

கந்தர்வகோட்டை, அக்.15:  மதுரை மேலூர் அருகே வெள்ளலூர் கிராமத்தை சேர்ந்தவர் மணி ஆடிட்டர். இவரது மகள் கலைச்செல்வி(44). திருமணத்திற்கு பிறகு கணவனால் கைவிடப்பட்டதால் மனநல பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் கலைச்செல்வி மதுரை மாட்டுதாவணி பகுதியில் இருக்கும் மாமா குமார் வீட்டிற்கு வந்தபோது பாதை மாறி பல இடங்களில் திரிந்துள்ளார். அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இந்நிலையில் கடந்த மாதம் 20ம் தேதி கந்தர்வகோட்டையில் காந்தி சிலை அருகே சாலையில் திரிந்த கலைச்செல்வியை அரியாணிப்பட்டியில் ரெனிவல் பவுண்டேஷன் என்ற பெயரில் மனநல காப்பகம் நடத்தி வரும் ஜேக்கப் வீரமணி, அவரது மனைவி பவுலா ஆகியோர் மீட்டு தங்களின் காப்பகத்தில் கடந்த 20 நாட்களாக பாதுகாத்து வந்தனர்.

இதுகுறித்து போலீசுக்கும் தெரிவித்து உறவினர்கள் யாரும் கேட்டால் ஒப்படைப்பதாக கூறினர். இதுகுறித்து ஜேக்கப்வீரமணி தனது முகநூலில் கலைச்செல்வி படத்தை பதிவிட்டு தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டுகோள் விடுத்திருந்தார். அதை பார்த்துவிட்டு வெளிநாட்டிலிருந்து ஒருவர் தொடர்பு கொண்டு மதுரை மேலூர் அருகே வெள்ளலூர் கிராமத்தை சேர்ந்தவர் என தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி விசாரணை செய்ததில் கலைச்செல்வி தாய் தந்தை இல்லாதவர் என்றும், கணவனால் கைவிடப்பட்டு மனநல பாதிக்கப்பட்டிருந்தார் எனவும் மூன்று மாதங்களாக பல இடங்களில் சுற்றி திரிந்துள்ளார். அதையடுத்து கடந்த 11ம் தேதி கந்தர்வகோட்டை காவல்நிலையத்திற்கு கலைச்செல்வியின் சித்தப்பா ராமையா மற்றும் உறவினர்கள் வந்து உரிய அடையாள ஆவணங்களை காண்பித்து சப்இன்ஸ்பெக்டர் பாஸ்கர் முன்னிலையில் கலைச்செல்வி உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்நிகழ்ச்சியில் ரெனிவல் பவுன்டேஷன் ஜேக்கப்வீரமணி, பவுலா ஜேக்கப், தகவல் தெரிவித்த பாரத் ரோட்டரியினர் அருண், சேவியர், மளிகை கடை காஜாமைதீன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

Tags :
× RELATED 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்ட வாலிபர் மீண்டும் சிறையில் அடைப்பு