இறால் பண்ணைகளை சேதப்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை வேண்டும்

சீர்காழி, அக்.15: சீர்காழியில் இறால் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இறால் விவசாயிகள் சங்கத் தலைவர் பூம்புகார் சங்கர் தலைமை வகித்தார். இறால் வளர்ப்பு வல்லுனர்கள் தொழில் நுட்ப ஆலோசனை நலசங்க தலைவர் பேராசிரியர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். இறால் பண்ணை உரிமையாளர் ராஜ்குமார் வரவேற்றார். கூட்டத்தில் இறால் விவசாயிகளின் பட்டா இடங்களில் உள்ள பண்ணைகளை அத்துமீறி சேதப்படுத்தும் நபர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவமழை காலம் தொடங்க இருப்பதால் இறால் வல்லுனர்களின் ஆலோசனைகளை கேட்டு தரமான இறால் குஞ்சுகளை தேர்ந்தெடுக்க வேண்டும், பழைய லைசென்ஸ்களை உடனே புதுப்பித்து வழங்க வேண்டும். புதிய விண்ணப்பங்களுக்கு லைசென்ஸ் பெறும் வழியை எளிதாக்க வேண்டும். அண்டை மாநிலமான ஆந்திர அரசு இறால் பண்ணை விவசாயிகளுக்கு வழங்கும் அதேவிலைக்கு தமிழக அரசும் மின்சார கட்டணத்தை வழங்க வேண்டும்.

இறால் விவசாயிகளுக்கு தேவையான டீசலை மானிய விலையில் வழங்க வேண்டும். பல்வேறு தரப்பட்ட மக்களுக்கும், படித்த பட்டதாரிகளுக்கும் வேலை வாய்ப்பினையும் தந்து அன்னிய செலவாணி தொகையில் பெரும் பங்கு கொள்ளும் இறால் விவசாயிகளை இத்தொழில் செய்பவர்களை போல் மிரட்டி தண்டல் மற்றும் இனாம் உள்ளிட்ட லஞ்சம் கேட்கும் சமூக விரோதிகளின் மீது கடும் நடவடிக்கை எடுத்து இறால் விவசாயிகளுக்கு பாதுகாப்பு தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : persons ,shrimp farms ,
× RELATED திருவள்ளுவர் சிலையை அவமதித்த நபர்கள் மீது நடவடிக்கை வேண்டும்