×

கல்லூரி மாணவர்கள் சரணாலயத்தில் தூய்மை பணி

திருப்புத்தூர், அக்.10: திருப்புத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி மாணவர்கள் வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் கிராம மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டனர். திருப்புத்தூர் அறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கல்லூரியை சேர்ந்த விலங்கியல்துறை இரண்டாமாண்டு மாணவர்கள் 40 பேர் மற்றும் பேராசிரியர்கள் கோபிநாத், கார்த்திகேயன், சிவக்குமார், ஆரோக்கிய ஜான்பால் மற்றும் ஆய்வக உதவியாளர்கள் பரமேஸ்வரி ஆகியோர் கடந்த இரண்டு நாட்கள் வேட்டங்குடி பறவைகள் சரணாலயப் பகுதிளை தூய்மைப்படுத்தும் பணியில் வனத்துறையுடன் இணைந்து ஈடுபட்டனர். மேலும் சரணாலய கரைப்பகுதியில் காட்டுகருவேல் மரங்களுக்கு போட்டியாக வளர்ந்துவரும் வேலிக்கருவை முட்செடிகளையும் அகற்றினர். இதற்கான ஏற்பாடுகளை வனச்சரக அலுவலர் மதிவாணன் தலைமையில், வனவர் சம்பத், வனக்காப்பாளர் வீரய்யா மற்றும் வனத்துறை காவலர்கள் மேற்கொண்டனர். மேலும் கிராம பணியின் ஒரு பகுதியாக 46 விவசாயிகளுக்கு அரசு தோட்டக்கலை துறை சார்பாக வழங்கிட 7 விதமான வீரிய ஒட்டுரக காய்கறி விதைகளை மாணவர்கள் வழங்கினர்.

Tags : college students sanctuary ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் இருந்து...