×

ஊசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரின்டர் இல்லாததால் 5 மாதமாக பிறப்பு, இறப்பு சான்று வழங்காமல் அலைக்கழிப்பு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

அணைக்கட்டு, அக்.10: ஊசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரின்டர் இல்லாததால் 5 மாதமாக பிறப்பு, இறப்பு சான்று வழங்காமல் அலைக்கழிக்கப்படுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அணைக்கட்டு தாலுகா ஊசூரில் மேம்படுத்தபட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு ஊசூர், தெள்ளூர் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 300க்கும் மேற்படட்வர்கள் உள் மற்றும் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும், மருத்துவமனையில் பிறக்கம் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழும், சிகிச்சை பலனின்றி இறந்தவர்களுக்கு இறப்பு சான்றிதழ்களை வழங்கப்பட்டு வந்தது. சான்றுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக வழங்க வேண்டும் என்ற உத்தரவுக்கு பின்னர், ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டு வந்தது.

ஆனால், ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரின்டர் இல்லாததால் வேறு மையத்தில் உள்ள பிரின்டர் மூலம் சான்றுகள் வழங்கப்பட்டு வந்தது. அதுவும் வேலை செய்யாததால் கடந்த 5 மாதத்திற்கு மேலாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறப்பு, இறப்பு சான்றுகள் வழங்கப்படாமல் உள்ளது.இதனால் சான்றுகள் கேட்டு தினந்தோறும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மக்களிடம் பிரின்டர் இல்லை நாளை வாருங்கள் என மருத்துவ அலுவலர்கள் கூறி அலைக்கழிக்கின்றனர்.எனவே ஊசூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறப்பு, இறப்பு உடனடியாக பதிவு செய்து சான்றுகள் வழங்க பிரின்டர் வசதி செய்து தர துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : public ,birth ,death ,Usoor Government Primary Health Center ,
× RELATED மாவட்ட அளவிலான செயல் திட்டத்தை...