×

நன்னிலத்தில் 1,837 யூனிட் சவுடு மண் பதுக்கல் 2 பேர் மீது போலீசார் வழக்கு

திருவாரூர், அக். 9: திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் ஆயித்து837 யூனிட் சவுடு மண் பதுக்கி வைத்திருந்ததாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் ஆற்று மணல் கடத்தல் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுப்பதற்கு பொதுப்பணி துறை, வருவாய் துறை மற்றும் போலீசார் என சம்பந்தப்பட்ட துறையினர் எவரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் சவுடு மண் என்ற பெயரில் அனுமதி பெற்று ஆற்றுமணல் கடத்தப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சவுடு மண் வெட்டி எடுப்பதற்கு அரசு மூலம் மூன்று மீட்டர் (10 அடி) ஆழத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் நிலையில் அதனை மீறி 25 அடி , 30அடி என பூமிக்கடியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு கடத்தப்பட்டு வருகிறது.மேலும் ஒருமுறை மட்டுமே அரசிடம் அனுமதி பெறப்பட்டு தொடர்ந்து பல ஆண்டுகள் வரையில் அதிகாரிகள் ஒத்துழைப்புடன் இந்த சவுடு மண் வெட்டி எடுக்கப்படும் சம்பவமும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் தொடர்ந்து இதே போன்று சவுடு மண் என்ற பெயரில் மணல் வெட்டி எடுக்கப்பட்டு தொடர்ந்து சென்னை உட்பட பல்வேறு இடங்களுக்கு இந்த மண் கடத்தப்பட்டு வருவது கடந்த பல ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது.

ஆளுங்கட்சியினர் மூலம் பல்வேறு பெயர்களில் அனுமதி பெறப்பட்டு இதுபோன்று சவுடு மண் வெட்டி எடுக்கப்படும் சம்பவத்தை தடுக்க கோரி சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் வருவாய்த்துறையினர், போலீசார் மற்றும் கலெக்டர் அலுவலகம் என பலருக்கும் பல்வேறு புகார் மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த நன்னிலம் தாலுகாவிற்குட்பட்ட கடுவங்குடி, சிறுபுலியூர், அண்ணதானபுரம், ஆணைகுப்பம் உட்பட பல்வேறு பகுதிகளில் இந்த சவுடு மண் வெட்டி எடுக்கப்படும் சம்பவமானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த இடங்களை கடந்த மாதம் கலெக்டர் ஆனந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கடுவங்குடி பகுதியில் சுமார் 700 யூனிட்வரையிலும், அண்ணதானபுரத்தில் ஆயித்து137 யூனிட் சவுடு மண் என ரூ 6 லட்சத்து 55 ஆயிரத்து 586 மதிப்பிலான ஆயிரத்து 837 யூனிட் சவுடு மண்ணை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கலெக்டரின் உத்தரவின் பேரில் நன்னிலம் தாசில்தார் திருமால் என்பவர் நேற்று முன்தினம் பேரளம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் கடுவங்குடியை சேர்ந்த பக்கிரிசாமி (50) மற்றும் அன்னதானபுரத்தை பாலசுந்தரம் (52) 2 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags : units ,Nanni ,
× RELATED டெல்லி முதல்வர் அரவிந்த்...