×

ஊராட்சி மன்ற அலுவலகம் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

கோவில்பட்டி, அக்.4: கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட இனாம்மணியாச்சி ஊராட்சியில் அத்தைகொண்டான், இந்திராநகர், சுபாநகர், சீனிவாசநகர், லட்சுமிமில், ஆலம்பட்டி, இனாம்மணியாச்சி, சாலைப்புதுர், தெற்கு கங்கன்குளம் ஆகிய பகுதிகள் அடங்கியுள்ளன. இந்த ஊராட்சியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்கான அலுவலகம் இனாம்மணியாச்சியில் நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆட்கள் நடமாட்டம், பாதுகாப்பில்லாத இடமான, நீண்ட தொலைவில் உள்ள கிருஷ்ணா நகரில் ஊராட்சி அலுவலகம் அமைத்து செயல்பட இருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதனை உடனடியாக ரத்து செய்யவும், இனாம் மணியாச்சியில் செயல்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை விரிவாக்கம் செய்து செயல்பட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கடந்த மாதம் 29ம்தேதி பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தினர். நேற்று இதே கோரிக்கையை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் கிராம மக்கள் மார்க்சிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினர் மல்லிகா தலைமையில் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.
இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முத்து, மாவட்ட தலைவர் உமாசங்கர், கிளை தலைவர் ஆனந்த், கிளை செயலாளர் கருத்தப்பாண்டி, மார்க்சிஸ்ட் ஒன்றியக்குழு உறுப்பினர் சின்னத்தம்பி, கிளை செயலாளர் அழகுசுப்பு உட்பட பலர் பங்ேகற்றனர்.  தொடர்ந்து கோரிக்கை மனுவை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) மாணிக்கவாசகத்திடம் அளித்தனர். அவர், இனாம்மணியாச்சி ஊராட்சி மன்ற அலுவலகம் இடமாற்றம் செய்யப்படாது என கூறினார். இதையடுத்து கிராம மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : Residents ,protest ,Kovilpatti ,Panchayat Office ,
× RELATED வாகனங்கள் எதுவும் செல்லக் கூடாதாம்...